அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் நகரப் பேருந்துகளில் அண்மைக்காலமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 30 கி.மீ. தொலைவுக்குட்பட்ட கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கிராமப்புற பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பயனடைந்து வருகின்றனர். பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால், பல்வேறு தரப்பினரும் நகரப் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். கி.மீ. ஏற்றவாறு ரூ. 3 முதல் ரூ. 10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு எவ்வித கட்டண உயர்வு அறிவிக்காத நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் கடந்த சில நாள்களாக பயணிகளிடம் ரூ. 1 முதல் ரூ. 2 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, ரூ. 5 கட்டணமாக வசூலிக்கப்படும் கிராமங்களுக்கு தற்போது ரூ. 6 என வசூலிக்கப்படுகிறது. இதனால், நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து, பயணி ஒருவர் கூறியது: பெரம்பலூரில் இருந்து அரசு நகரப் பேருந்தில் வாலிகண்டபுரத்திற்கு சென்று வருகிறேன். வாலிகண்டபுரத்திற்கு ரூ. 7 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 8 அல்லது ரூ. 9 வசூலிக்கப்படுகிறது. நடத்துநரிடம் கேட்டால், உரிய பதில் அளிக்க மறுக்கிறார் என்றார் அவர். பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் அதிகமாக வசூல் ஈட்டவும், போக்குவரத்துக் கழக கோட்டத்தில் அதிக வசூல் பெறும் கிளை என்ற பெயரை உயர் அதிகாரிகளிடம் பெறவும் பெரம்பலூர் கோட்ட மேலாளரும், கிளை மேலாளரும் கூடுதல் கட்டணம் வசூலிக்க நடத்துநர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர் தொழிற்சங்க நிர்வாகிகள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-