அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய். சர்வதேச அளவில் நவீன கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் துபாய் முன்னிலை வகித்து வருகிறது. அதில் ஒன்றாக தற்போது பறக்கும் டாக்சி சேவையை அறிமுகபடுத்திறது. சமீபத்தில் துபாயில் உலக அரசு உச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு நாட்டினரும் பங்கேற்றுள்ளனர். இதில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் டாக்சி சேவையாக ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையிலான autonomous aerial vehicle (AAV) பறக்கும் கார் என்றழைக்கப்படும் தானியங்கி பறக்கும் வாகனம் பார்வைக்கு வைக்கப்பட்டது. வரும் ஜீலை மாதம் இந்த குட்டி விமானம் போன்று காணப்படும் இந்த வாகனம் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹோவர் டாக்சி என்றும் குறிப்பிடப்படும் இந்த பறக்கும் வாகனம் அதிகபட்சம் மணிக்கு 160 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் வாய்ந்ததாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும். தரைக் கட்டுப்பாட்டு மையம் மூலமாக, பறக்கும் காரின் வழித்தடம், வேகம், இறங்கும் இடம் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். இதன் நீளம் 12 அடியாகும் அகலம் 14 அடி உயரம் 5.2 ஆகும் .இது நவீன தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும் பயணி இதில் அமர்ந்து எதிரே இருக்கும் தொடு திரையில் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் அங்கே தரையிறக்கி விடும். தொடர்ந்து 30 நிமிடம் பறக்கும் இந்த வாகனம் அதிகபட்சமாக 2 மணிநேரம் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிவேக ஹைப்பர் லூப் தொழில் நுட்பத்தில் போக்குவரத்து தயாராகி வருகிறது மணிக்கு 1220 கிலோமீட்டர் வேகத்தில் தரைவழி பயணமா ? சாத்தியம் என‌ துபாய் ஹைப்பர் லூப் தொழில் நுட்பத்தில் உலகின் அதிவேக போக்குவரத்தாக உருவாக இருக்கும் குழாய் வடிவிலான‌ ஹைப்பர் லூப் பயணிகள் போக்குவரத்து யுஏஇல் அறிமுகபடுத்தப்பட உள்ளது. சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் துபாயில் இத்திட்டத்தை செயல்படுத்த‌ சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் அதன் பொது இயக்குநர் மத்தார் அல் தயார் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த‌ ஹைப்பர் லூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராப் லியாட் அகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்கான வரைபடமும் வெளியிடப்பட்டது.

இந்த போக்குவரத்தின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 1220 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் இத்திட்டம் நிறைவடையும் போது துபாயிலிருந்து அபுதாபிக்கு 125 கிலோ மீட்டர் தூரத்தை 12 நிமிடத்தித்திற்கு கடக்க‌ செல்ல முடியும். 2020ற்குள் இப்பணிகள் நிறைவடையும் என எதிர்ப்பாக்கப்படுகிறது ஹைப்பர்லூப் போக்குவரத்து என்பது குழாய்களுக்குள் ரயில் பெட்டிகள் போன்று அமைக்கப்பட்டு பெட்டிகளில் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் கேப்சூழ்கள் எனப்படும் பெட்டிகள் அமைக்கப்படும் .இது காந்த விசையில் காற்றில் மிதந்து செல்வது போல குழாய்களில் பயணிக்கும் என்பதால், அதிர்வுகள் மிக குறைவாக இருக்கும். , இதற்காக தரையில் அமைக்கப்படும் கான்க்ரீட் தூண்கள் நிலநடுக்கத்தில் கூட ஏதும் ஆகாத வகையில் கட்டமைக்கப்படும். சூரிய சக்தி மற்றும் இதர வகை மூலத்திலிருந்து பெறப்படும் மின்சாரம் லித்தியம் அயான் பேட்டரியில் சேமிக்கப்பட்டு, மின் மோட்டார்கள் மூலமாக இந்த ஹைப்பர் லூப் சாதனம் இயங்கும். எனவே, புகை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-