அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சி: திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து தற்போது ஏர் இந்தியா நிறுவனம் சார்ஜாவிற்கு அதிகாலை 2.40 மணிக்கு திருச்சி வந்து 3.40 மணிக்கு சார்ஜாவிற்கு இயக்கப்பட்டு வருகிறது. துபாய்க்கு இரவு 12.10 மணிக்கு திருச்சி வந்து துபாய்க்கு நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதே போல மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை, திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் திருச்சிக்கு மாலை 2.20 மணிக்கு 3.10 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். இந்த விமான சேவைகளில் நிர்வாக காரணமாக இந்த விமான சேவையில் நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விமானிநிலைய வட்டாரங்கள் கூறியதாவது: திருச்சி விமானநிலையத்தில் இருந்து துபாய் விமான சேவை நள்ளிரவு 12.10 மணிக்கு வந்து 1 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.15 மணிக்கு வந்து 2.05 மணிக்கு புறப்பட்டு செல்லும். சார்ஜா விமான சேவை அதிகாலை 2.40 மணிக்கு வந்து 3.40 மணிக்கு பதிலாக மாலை 2.40 மணிக்கு வந்து 3.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதே போல சிங்கப்பூரில் இருந்து திருச்சி, சென்னை வழியாக மலேசியா செல்லும் விமான சேவை ரத்து செய்யப்பட்டு திருச்சி-சிங்கப்பூர்-திருச்சி விமான சேவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் திருச்சி சென்னை இடையே அளித்து வந்த உள்நாட்டு விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா விமானம் திருச்சி விமானநிலையத்திற்கு மாலை 4.45 மணிக்கு வந்து இரவு 7.05 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். இந்த மாற்றம் நேற்று முதல் 40 நாட்களுக்கு இருக்கலாம் என்றனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-