அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: பிப்-01
சவூதியில் ஏற்பட்டுள்ள ஷமூன்-2 வைரஸ் பாதிப்பால் வெளிநாட்டினர் பலரும் தங்களுடைய விசாக்களை புதுப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர், வைரஸ் பாதிப்படைந்தவர்கள் மட்டும் உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய தகவல் மையத்தை (The national information center) தொழிலாளர் மற்றும் சமூக நல மேம்பாட்டு அமைச்சகத்தின் (The labor & social development ministry) வழியாக அணுகி வேண்டுகோள் விடுப்பதன் மூலம் அபராதம் மற்றும் இதர தண்டனைகளிலிருந்து விலக்கு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சவுதி பாஸ்போர்ட் துறை இயக்குனரகம் அறிவித்தள்ளபடி, வைரஸ் பாதிப்புக்குள்ளாகாத நிலையில் காலாவதியாகும் விசாக்களை குறைந்தபட்சம் 3 வேலை நாட்களுக்கு முன்பாக புதிப்பிக்க வேண்டும் தவறினால் முதல் முறை 500 ரியாலும், இரண்டாம் முறை 1000 ரியாலும், மூன்றாம் முறையும் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர் நாட்டை விட்டும் வெளியேற்றப்படுவார்.

அதேபோல், விசா இல்லாத சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள் பிடிபட்டால் முதன்முறை 25,000 ரியால் மற்றும் 1 வருட புதிய விசாக்கள் பெறுவதற்கான தடை விதிக்கப்படும். அந்நிறுவனத்தின் மேலாலளர் வெளிநாட்டினராக இருக்கும்பட்சத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.

இரண்டாம் முறை பிடிபடும் போது தண்டனைகளும் இரட்டிப்பாக்கப்படும், 50,000 ரியால், 2 வருடங்கள் புதிய விசாக்கள் பெறுவதற்கான தடை, 6 மாத ஜெயில் தண்டனைக்குப் பின் வெளிநாட்டு மேலாளராக இருந்தால் சவுதியை வெளியேற்றப்படுவார். நிறுவனமும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.

மூன்றாம் முறை பிடிபடும் போது தண்டனைகளும் இன்னும் அதிகமாகும், 100,000 ரியால், 5 வருடங்கள் புதிய விசாக்கள் பெறுவதற்கான தடை, 1 வருட ஜெயில் தண்டனைக்குப் பின் வெளிநாட்டு மேலாளராக இருந்தால் சவுதியை வெளியேற்றப்படுவார். நிறுவனமும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-