அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... நியூஸ்: பிப்-01
சவுதியின் தொழிலாளர் மற்றும் சமூக நல மேம்பாட்டு அமைச்சகத்தின் (Saudi Labor & Social Development Ministry) கம்ப்யூட்டர் சிஸ்டம் அனைத்தும் 'ஷமூன் - 2' (Shamoon-2) என்ற வைரஸால் பாதிக்கப்பட்டு முற்றிலும் செயலிழந்துள்ளதால் கடந்த 2017 ஜனவரி 23 ஆம் தேதி முதல் தற்போது வரை புதிய விசாக்களை பெற முடியாமல் நிறுவனங்களும், அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் தங்களது விசாக்களை புதுப்பிக்க முடியாததால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், விசாவை புதுப்பிக்க முடியாமல் காலதாமதம் ஏற்படுவதால் அதற்கான அபராதத்தையும் செலுத்த நேரிடுமோ எனவும் அஞ்சுகின்றனர்.

சவுதியின் பல பகுதியிலும் செயல்படும் தொழிலாளர் மற்றும் சமூக நல மேம்பாட்டு அமைச்சகத்தின் கம்ப்யூட்டர் சிஸ்டம் அனைத்தும் ஒட்டுமொத்தமாக செயலிழந்துள்ளது. எப்போது வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டுவரும் என்பதை விளக்கிச் சொல்ல சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் யாருமில்லை, ஹாயாக வீட்டுக்குச் சென்று விடுகின்றார்களாம். அதிலும் அல் மர்வாஹ் அலுவலகத்தை சேர்ந்த ஒரு அதிகாரி சொன்ன பொறுப்பான பதில் என்ன தெரியுமா? ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ சரியாகலாம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே 2012 ஷமூன்-1 வைராஸ் 2012 ஆம் ஆண்டு சவுதி அராம்கோவின் (Saudi Aramco) கம்ப்யூட்டர்கள் செயலிழந்த முன்னனுபவம் உள்ளதால் இப்புதிய வைரஸ் குறித்து கவனமாக இருக்குமாறு இம்மாத ஆரம்பத்திலேயே 'ஷமூன்-2' வைரஸ் தாக்கும் என சவுதியின் தொலைத்தொடர்புத் துறை எச்சரித்திருந்தது.

ஓவ்வொரு விசா புதுப்பித்தலுக்கும் சவுதி தொழிலாளர் அமைச்சகத்திற்கு 2,400 ரியாலும், பாஸ்போர்ட் துறைக்கு 650 ரியாலும் கட்டணமாக செலுத்தப்பட வேண்டிய நிலையில், கம்ப்யூட்டர் வைரஸால் ஏற்பட்டுள்ள தாமதத்திற்காக அபராதம், சிறை தண்டனை மற்றும் புதிய விசாக்களுக்கான தடைகளை வேலை வழங்கும் நிறுவனங்கள் அனாவசியமாக சந்திக்க வேண்டி வரலாம்.

Source: Saudi Gazette
அதிரை news
தமிழில்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-