அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அடிப்படை வசதிகள் குறித்த புகார்: கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்த குறைபாடுகளை கட்டணமில்லா தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் க. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை, குடிநீர் குழாய்களில் உடைப்பு, குடிநீர் விநியோகத்தில் குறைபாடு, அகற்றப்படாத குப்பைகள், சாக்கடை சுத்தம் செய்யப்படாமலிருத்தல், பேருந்து வந்து செல்வதில் குறைபாடு, தெரு விளக்கு எரிவதில் குறைபாடு, நீண்ட நேரம் மின்தடை, மின் கம்பம் சாய்ந்திருப்பது, மின் கடத்திகள் தாழ்வாக இருப்பது, பொருள்கள் அல்லது சேவை பெறும்போது தரத்தில் அல்லது விலையில் ஏதேனும் குறைபாடு இருத்தல் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருந்தால், ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் 1800 425 4556 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதன்பேரில், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் க. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-