அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே 5 வயது சிறுமியை தனியார் மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து சிறுமியின் தாயார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வரகுனராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரஜப்நிஷா. இவருக்கு இரண்டு மகள்கள். மூத்தமகள் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-12-16 அன்று அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருவம் சுரண்டையைச் சேர்ந்த ஜெபராஜ் என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும்,உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அதற்கு இதுவரை பதில் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாய் ரஜப்நிசா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து உடலில் பெட்ரோல் ஊற்ற முயற்சித்தார். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் பாதிக்கப்பட்ட சிறுமி இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த வழக்கில் உண்மையை மறைக்காது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிவேண்டும் என சிறுமியின் தாய் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இங்கு அரசாங்கமும் செயல்படவில்லை. அதிகாரிகளும் செய்ல்படவில்லை.

அநீதிக்கு உள்ளாக்கப்பட்டவன் மீதே பலிபோடும் கேவளமும் அறங்கேறி வருகிறது.

தமிழக அரசே...! காவல்துறையே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டு...

பச்சிளங்குழந்தைகளையும், பெண்களையும் கற்பழிப்பு செய்யும் காமக்கொடூரர்களை தூக்கிலேற்று...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-