அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தற்போது பள்ளி மாணவர்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
இது குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் வேலூரில், ரூபெல்லா தடுப்பூசி போட்ட அடுத்த சில நொடிகளில் ஒரு பள்ளி மாணவி உள்பட 3 பேர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை தடுப்பூசி போட்டுக் கொண்ட 7-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா (வயது 12) அடுத்த சில விநாடிகளில் மயங்கி விழுந்தார். இவர், சத்துவாச்சாரி அரசு பள்ளி பின்புறம் வசிக்கும் முருகானந்தம் என்பவரின் மகள்.
இதேபோல் 9-ம் வகுப்பு மாணவர்கள் வள்ளலார் பேஸ்-1 பகுதியை சேர்ந்த ராமநாதன் மகன் கவுதம் (14), ரங்காபுரம் பாலாஜி மகன் வைத்தீஸ்வரன் (14) ஆகிய 2 பேரும் தடுப்பூசி போட்ட அடுத்த சில நொடிகளில் மயங்கி விழுந்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த மாணவி உள்பட 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மயங்கி விழுந்த மாணவர்கள் கூறுகையில் தடுப்பூசி போட்டவுடன் அரிப்பு ஏற்பட்டு தலை சுற்றல் இருந்தது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டோம் என்றனர்.
சிசிக்சைக்கு பின் மாணவர்கள் நலமாக உள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-