அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருச்சி: வெளிநாடு வேலை வாய்ப்பை விரும்புவோருக்கான விழிப்புணர்வு மற்றும் பதிவு முகாம் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் வரும் 26ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு குறித்த விளக்கங்கள், பதிவு செய்தல் போன்ற விவரங்கள் வேலை நாடுவோருக்கு அளிக்கப்படும். தற்போது சவூதியில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனைகளுக்கு 2 வருட பணி அனுபவம் மற்றும் 35 வயதிற்குட்பட்ட பி.எஸ்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சி மற்றும் சவூதி புரோமெட்ரிக் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் பெருமளவில் தேவைப்படுகின்றனர். இப்பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ரூ.980க்கான பதிவுக் கட்டணத்தை செலுத்தி பிரத்யேக விண்ணப்ப படிவம் பெற்று பதிவு செய்துக் கொள்ளலாம்.
மேலும் ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவது ஒரு நிறுவனத்தில் 2 வருட பணி அனுபவத்துடன் 22 முதல் 26 வயதிற்குட்பட்ட இயந்திரம் இயக்குபவர்கள் தேவைப்படுகின்றனர்.

அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ரூ.25 ஆயிரம் வரை ஊதியம், இலவச இருப்பிட வசதி வழங்கப்படும். இப்பதிவு மற்றும் விழிப்புணர்வு முகாமில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்ற இதர தொழில் பிரிவினரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். எனவே தகுதியுள்ள இயந்திரம் இயக்குபவர்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட், சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகிய நகல்கள் மற்றும் நீலநிற பின்னணியில் எடுக்க 5 புகைப்படத்துடன் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 26ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம். முதல்கட்ட தேர்வுக்கு வரும் பெண் செவிலியர்கள் விழிப்புணர்வு மற்றும் பதிவு முகாமில் பதிவுக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று பதிவு செய்து பின்னர் நடத்தப்படும் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 22505886 என்ற போன் எண்ணிலோ அல்லது www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைத்தளத்தையோ அணுகலாம் என வேலை வாய்ப்பு நிர்வாக இயக்குனர் சுப்பையன் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-