அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...










சிரியாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு காரசாரமான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளார்.

அவரின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா முதல் பல நாடுகளின் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உள்நாட்டு போரில் சிக்கி சிரியா நாட்டில் உயிர்ப்பிழைத்து வசிக்கும் 7 வயது சிறுமி பானா அலாபத் டிரம்பிடம் சரமாரியாக கேள்வி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அவர் தனது தாயாரின் டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ’உங்களது நடவடிக்கை மிகவும் மோசமானது. சிரியாவில் உள்ள குழந்தைகளும் தீவிரவாதி போல தெரிகின்றனரா? அவர்களைப் பற்றி நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

நீங்கள் என்றாவது 24 மணி நேரமும் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்திருக்கிறீர்களா? தடையை நீக்கவில்லை என்றால் எங்கள் நாட்டையாவது அமைதியாக இருக்க விடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் டிரம்பின் நடவடிக்கை குறித்து அனைவரும் தங்களது கருத்துக்களை கூறி இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் சிறுமி அலாபத்தின் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

மேலும் அமெரிக்கா செய்திகள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-