அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பிப்-01
சவுதி, ஜித்தா நகரின் கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தின் தென்பகுதி முனையமும் (South Terminal), சவுதி அரேபியன் ஏர்லைன்ஸின் உள்நாட்டு விமான போக்குவரத்தும் ஜெத்தாவின் புதிய விமான நிலையத்திற்கு இவ்வாண்டு இறுதிக்குள் மாற்றப்படும்.

இப்புதிய விமான நிலையம் 105 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் 220 பயணிகள் சேவை கவுண்டர்களுடன் 80 தானியங்கி கவுண்டர்களும் (Self service machines) அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8,200 வாகன நிறுத்துமிடங்களில் 4,300 நிறுத்துமிடங்களில் வாகனங்களை நீண்டநேரம் நிறுத்தி வைக்க முடியும்.

அதேபோல் ஒரே நேரத்தில் 3,000 பேர் தொழக்கூடிய பள்ளிவாசலும், அனைத்து முனையங்களையும் (All Terminal) இணைக்கும் வகையிலான மின்சார ஷட்டில் வாகன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உலகிலேயே உயரமான வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரமும் (ATC) 136 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் லக்கேஜ் வசதிக்காக மொத்தம் 33 கி.மீ தூர அளவுக்கான கன்வேயர் பெல்;ட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தவுடன் அனைத்துவகை ஊழியர்களுக்கான பயிற்சிகள் துவங்கும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-