அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீண்ட நாட்களாகவே திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் ஒரு முக்கியத் தேவையாக இருந்த காலைநேர மெட்ராஸ் தினசரி விமானசேவையானது தற்போது பூர்த்தி செய்யப்பட இருக்கிறது ஏர் கார்னிவலால்.
ஆம்,

கோயம்புத்தூரை தலைமையிடமாகவும்,

மெட்ராஸை இயக்கத் தலைமையிடமாகவும் (Hub) கொண்ட ஏர் கார்னிவல் விமானமானது,

வருகின்ற பிப்ரவரி 20 முதல் தனது தினசரி நேரடி விமானசேவையை,

மெட்ராஸ் - திருச்சிராப்பள்ளி - மெட்ராஸ் வழித்தடத்தில் தொடங்கவுள்ளது.
வரும் பிப்ரபரி 20 முதல் மெட்ராஸில் தினசரி காலை 8.10 க்கு புறப்படும் ஏர் கார்னிவல் விமானம் 2S 121 ஆனது, திருச்சிராப்பள்ளியை காலை 9.15 க்கு வந்தடையும்.

மறுவழித்தடத்தில் தினசரி திருச்சிராப்பள்ளியில் காலை 9.45 க்கு புறப்படும் ஏர் கார்னிவல் விமானம் 2S 122 ஆனது மெட்ராஸை காலை 10.40 க்கு சென்றடையும்.
அறிமுக சலுகையாக இரு வழித்தடத்திலும் பயணக்கட்டணமானது அனைத்து வித வரிகளும் உள்ளடக்கி ரூபாய் 1,500 மட்டுமே. முன்பதிவும் தொடங்கப்பட்டுவிட்டது.
விமானபயணிகள் இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
கடந்த அக்டோபர் 30, 2016 அன்றே தொடங்கப்பட இருந்த இந்த விமானசேவையானது சில நிர்வாக காரணங்களால் தள்ளிப்போய் தற்போது வரும் பிப்ரவரி 20 அன்று தொடங்கப்பட உள்ளது.
பாராமவுண்ட்,

ஏர் டெக்கான்,

கிங்பிஷர் விமானநிறுவனங்கள் இருந்த காலகட்டங்களில் சிறிது காலங்களே பயன்பாட்டில் இருந்த காலைநேர விமானசேவையானது,

அந்தந்த விமானநிறுவனங்கள் நிர்வாகக் காரணங்களால் சந்தையை விட்டு வெளியேறியபோது, திருச்சிராப்பள்ளி - மெட்ராஸ் காலைநேர விமானசேவையும் நிறுத்தப்பட்டது.
தற்போது திருச்சிராப்பள்ளி - மெட்ராஸ் வழித்தடத்தில் தினசரி மூன்று நேரடி விமானசேவைகளை வழங்கிவரும் ஜெட் ஏர்வேஸ் ஆனதும் காலைநேர சேவையை மெட்ராஸுக்கு வழங்கவில்லை.

தினசரி நன்பகல், மாலை மற்றும் இரவு நேர சேவைகளையே வழங்கிவருகின்றது.

ஆனால்,

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குளிர்கால அட்டவணைக்காலம் (Winter Schedule) முழுவதும் வெற்றிகரமாக இயக்கிவிட்டு,

அதாவது மெட்ராஸில் இருந்து, கோயம்புத்தூர், பெங்களூர், மதுரை போன்ற குறுந்தொலைவு விமானசேவைகளை ஒப்பிடுகையில், இவற்றைவிட அதிக விலையில் திருச்சிராப்பள்ளிக்கு காலைநேர சேவையை வழங்கியது. பயணிகளிடத்தில் மிகுந்த வரவேற்பு பெற்றிருந்த சேவை அது. பின்னர் நிர்வாகக் காரணம் என்று கூறி (?) அந்த காலைநேர வெற்றிகரமான விமானசேவையை ஜெட் ஏர்வேஸ் இரத்து செய்தது பழைய கதை.
தற்போது மீண்டும் பல கடுமையான உழைப்புகளுக்கு பின்னர் காலைநேர நேரடி விமானசேவை ஏர்கார்னிவலால்.
திருச்சிராப்பள்ளியில் இருந்து வேலை, அலுவலகம் உள்ளிட்ட பல காரணங்களால் காலையில் புறப்பட்டு மெட்ராஸ் சென்று அன்றிரவே திரும்புபவர்களுக்கும்,

மெட்ராஸ் சென்று இணைப்பு விமானத்தை பிடிப்பவர்களுக்கும்,

பல்லவன்,

வைகை,

சோழன் விரைவு இரயில் பயணிகளுக்கு மாற்றாகவும் (தேவையெனில்) மெட்ராஸிற்கு செல்ல ஒரு நல்ல தீர்வு இந்த காலைநேர விமானசேவை.
அதேபோல்,

எமிரேட்ஸ்,

இத்திகாத்,

ஏர் அராபியா,

ஓமன் ஏர்,

கத்தர் ஏர்வேஸ்,

கல்ப் ஏர் மற்றும்

குவைத் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளில் இருந்து அதிகாலை மெட்ராஸ் விமானநிலையம் வந்தடையும் அனைத்து பயணிகளுக்கும், திருச்சிராப்பள்ளிக்கு வருவதற்கு இதுவே முதல் விமானசேவையாகும்.

மேலும் பண்ணாட்டு விமான பயணிகளுக்கு சுமையில் (Luggage) சில சலுகைகள் வழங்கவும் ஏர் கார்னிவல் விமானநிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த விமானசேவையானது முறையாக,

திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுப்புற விமான பயணிகளைச் சென்றடையும் பட்சத்தில்,

இந்த மெட்ராஸ் - திருச்சிராப்பள்ளி - மெட்ராஸ் காலைநேர விமானசேவையானது ஒரு வெற்றிகரமான விமானசேவை என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
வெற்றிபெற வாழ்த்துவோம்!

ஒத்துழைப்போம்!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-