அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் 15நாட்களாக குடிநீர் விநியோகிக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் காலிக் குடங்களுடன் 2 இடங்களில் திடீர் சாலை மறியல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு தற்போதைய கடும் வறட்சி காரணமாக திட்டமிட்ட அளவுக்கு இல்லாமல் தற்போது தண்ணீர் குறைந்த அளவே கிடைத்து வருகிறது. இந்தத் தண்ணீர் இல்லாமல், தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவுரோடு, எளம்பலூர் உப்போடை, கலெக்டர் பங்களா அருகே என பல்வேறு இடங்களில் உள்ள குடிநீர்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் குடிநீ ரும் மாறி, மாறி விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும் நடப்பாண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனை சமாளிக்க லாரிகளில், டிராக்டர்களிலும் அவ்வப்போது குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் 5,6,7வார்டுகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப் படவில்லையென சாமியப்பா நகர், நடேசன் பிள்ளைநகர், பாலாஜி நகர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நேற்று காலிக் குடங்களுடன் எளம்பலூர் சாலையில் திடீர்  மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகராட்சிப் பொறியாளர் குணசேகரன், ஓவர்சியர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மாவட்ட குற்றப் பதிவேடுகள் பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், எஸ்ஐ ராஜா உள்ளிட்டோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீ ஸார் முன்னிலையில், நகராட்சிப் பொறியாளர் உள்ளிட்டோரிடம் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

15 நாட்களாக குடிநீர் தராமல் நகராட்சி நிர்வாகம் எதற்காக செயல்படுகிறது. எப்போதாவது வந்தாலும் சிறிதளவே குடிநீர் குழாய்களில் ஊற்றுகிறது, நிரந்தரத் தீர்வு காணாவிட்டால் நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய் வோம் என்றனர்.    
இந்த மறியல் நடந்து கொண்டிருந்த போதே  இந்த இடத்திற்கு நேர்எதிரே 50மீட்டர் தூரத்தில் அதே சாலையில், முத்துநகர், கம்பன்நகர் பகுதி பெண்களும் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் லாரி, டிராக்டர்களில் குடிநீர் விநியோகிப்பதாக நகராட்சிப் பொறியாளர் குணசேகரன் அளித்தார். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவங்களால் எளம்பலூர் சாலை நேற்று பரபரப்பாக காணப்பட்டது.மறியலால் சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சியிலிருந்து குடிநீர்பெரம்பலூர் நகராட்சி இரண்டாம் நிலை அந்தஸ்து கொண்டது. இந் நகராட்சிக்கு  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், ஒருங்கிணைந்த கூட்டுக்  குடிநீர்த் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில்  தண்டாங்கோரை என்ற இடத்தி லிருந்து ஆழ்குழாய் மூலம் குடிநீர் பெறப்படுகிறது.  இந்தத் தண்ணீர் தாளக்குடி, பெரகம்பி, செட்டிக்குளம், சத்திரமனை,  ரெங்கநாதபுரம், செஞ்சேரி வழியாக பெரம்பலூர் நகராட்சிக்கு ராட்சத  குழாய்களில் கொண்டுவந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம்  விநியோகிக்கப்பட்டு வருகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-