அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷெரிப். இவரது மனைவி சர்புன்ஷா (வயது 60). இவரது மாமியார் குல்சன்பேபி. இவர்கள் 3 பேரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் 2 நபர்கள் காலிக்குடங்களுடன் வந்து சர்புன்ஷாவிடம் நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம், எங்களுக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து சர்புன்ஷா அவர்களிடம் குடத்தை வாங்கி தண்ணீர் பிடித்து கொடுத்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் மாலை சுமார் 5 மணியளவில் சர்புன்ஷா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இதையடுத்து சர்புன்ஷா கதவை திறந்து பார்த்த போது காலையில் தண்ணீர் வாங்கி சென்ற நபர்கள் வந்திருந்தனர். உடனே சர்புன்ஷா அவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது அவர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி சர்புன்ஷா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து சர்புன்ஷா மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-