அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் பிப். 5 வரை நடைபெறும் 6 ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில், வெள்ளிக்கிழமை (ஜன. 27) முதல் பிப். 5 ஆம் தேதி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் 90 பதிப்பகங்களைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சிப் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நுழைவுக் கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.1 வசூலிக்கப்படுகிறது. மேலும், தேசிய விருதுபெற்ற திரைப்படங்கள் கண்காட்சியில் காண்பிக்கப்படுகிறது.
அனைத்து புத்தங்களுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
10 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இக்கண்காட்சியில் காலை 11 முதல் மாலை 4 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு, ஆட்சியர் க. நந்தகுமார் தலைமை வகித்தார்.
இந்தியா நேஷனல் புக் டிரஸ்ட் நிர்வாகி மதன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் பா. வேலு வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா. சிவராமன் நன்றி கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-