அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரில் புர்ஹான் வாணி கொல்லப்பட்ட பிறகு பல பகுதிகளில் வன்முறை ஏற்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் ஜவஹர் நகரை சேர்ந்த இந்து பண்டித் குடும்பத்தினர் உணவின்றி தவித்துள்ளனர்.

இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படாத ஸ்ரீ நகரில் வசிக்கும் தம்முடைய இஸ்லாமிய தோழி ஒருவருக்கு போன் செய்து நான்கு நாட்களாக தம்முடைய குடும்பம் உணவின்றி தவித்து வருவதாக இந்து தோழி கூறியுள்ளார்.

144 தடை உத்தரவு இருப்பதால் போக்குவரத்து இல்லாத நிலை இருந்தும் தம்முடைய தோழியின் குடும்பம் உணவின்றி தவிப்பதால் கணவரிடம் சொல்லி அந்த குடும்பத்திற்கு தேவையான அரசி, மளிகை பொருட்கள், காய்கறி பொருட்களை எடுத்துக்கொண்டு பல கிமீ தூரம் கணவனும், மனைவியும் நடந்தே சென்று ஒப்படைத்தனர். 

செல்லும் வழியில் எண்ணற்ற பாதுகாப்பு படையினர் சோதனையிட்டு, விசாரணை நடத்தப்பட்டு சந்தேகம் கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் இஸ்லாமிய தம்பதிகளுடன் இணைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டின் கதவை தட்டியவுடன் கதவை இந்து தோழி, இஸ்லாமிய தோழியை கண்டவுடன் கண்ணீரோடு கட்டியணைத்துள்ளார்.

இதனைக்கண்ட காவல்துறை அதிகாரியும் கண் கலங்கியுள்ளார்.

தம்முடைய இந்து தோழியின் குடும்பம் பட்டினியாக கிடக்கக்கூடாது என்று பல கிமீ தூரம் உணவுப்பொருட்களுடன் நடந்தே சென்ற இஸ்லாமிய தம்பதிகளை காவல்துறை பாராட்டி சென்றார்.

தகவல் உதவி : இந்தியா டுடே

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-