அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர் அருகே பதினோரம் வகுப்பு மாணவி வயிற்றுவலி தாளாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் கிராமம், காட்டுக்கொட்டகையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் அனுசுயா (16). 

இவர் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோரம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதாக கூறப்படுகிறது. இதே போல் நேற்று மாலையிலும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் பயிர்களுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை அருந்திவிட்டு மயங்கி கிடந்துள்ளார். 

இது குறித்து தகவல் தெரிந்த அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிசிச்சையளித்து, பின்னர், மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சையின் போது அனுசுயா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thanks to- kalaimalar.com 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-