அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சிரியாவில் குளிரில் வாடிவரும் மக்களுக்கு நாம் பயன்படுத்தாத ஆடைகளை மக்களிடமிருந்து பெற்று அவர்களுக்கு உதவும் நோக்கில் குவைத்தில் அமைந்துள்ள தமிழ் இஸ்லாமிய சங்கம் இந்த முகாமை ஏற்ப்பாடு செய்துள்ளது.

ஆண்,பெண்,குழந்தைகள் உடுத்தக்கூடிய புதிய நல்ல நிலமையில் உள்ள பயன்படுத்தாத துணிகள்,ஆடைகள்,விரிப்புகள்,போர்வைகள்,ஏனைய துணிகள் எதுவாகிலும் சலவை செய்து,முடிந்தால் அயர்ன் செய்து பிளாஸ்டிக் கவரில் வைத்தோ, செய்தித்தாள்களில் வைத்தோ ஒப்படைக்கவும்.
குவைத்தில் வசிக்கும்மக்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என தமிழ் இஸ்லாமிய சங்கம் அறிவித்துள்ளது.அவற்றை ஒப்படைக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06.01.2017) ஜும்ஆ தொழுகை வரை ஃகைத்தான் K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் ஒப்படைக்கலாம் என குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் அறிவித்துள்ளது.9730 2747 என்ற எண்னை தொடர்புக்கெண்டு விபரங்கள் பெறலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-