அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், ஜன-03
ஆடம்பரங்களுக்கு அடுத்து, நவீன துபைக்கு சுற்றுலா பயணிகளையும், வர்த்தகர்களை ஈர்க்கும் முக்கிய தூண்டில்களாக பிரம்மாண்ட கட்டுமானங்களே முக்கிய அங்கம் வகிக்கின்றன. 

அதனடிப்படையில் புதிய பயணிகள் துறைமுகம் மற்றும் லைட் ஹவுஸ் நிர்மாணிப்பிற்கான திட்டம் குறித்து துபை ஆட்சியாளர் ஷேக் முஹமது அவர்கள் முறைப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

ஜூமைரா பீச் ரெஸிடன்ஸ் மற்றும் பாம் ஜூமைராவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் சுமார் 20 மில்லியன் சதுர அடியில் 'துபை துறைமுகம்;' கட்டப்படவுள்ளது. 

இந்தத் துறைமுகத்தில் ஒரே நேரத்தில் 1400 ஆடம்பர படகுகள் மற்றும் பயணியர் கப்பல்களை நிறுத்த முடியும் மேலும் ஒரே நேரத்தில் சுமார் 6000 பயணிகளின் வருகையை கையாள முடியும்.

மேலும், அதே இடத்தில் சுமார் 3.5 மில்லியன் சதுர அடியில் ஷாப்பிங் மால், கலையரங்கம் (Events Arena), குடியிருப்பு கட்டிடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், அலுவலகங்கள், சில்லறை வணிக நிறுவனங்கள், அரசின் பொது சேவை மையங்கள், உணவகங்கள், தேநீரகம் இவற்றுடன் 135 அடி உயர பிரம்மாண்ட லைட் ஹவுஸ் ஒன்றும் புதிய துபை துறைமுகத்தை சூழ வரவுள்ளது.

துறைமுகத்திற்கான நிலப்பகுதி தோண்டுதல் பணி நிறைவடைந்த பின் 4 ஆண்டுகளில் இத்திட்டம் கட்டி முடிக்கப்படும். 3 ஹெலிகாப்டர் தளங்கள் (Helipads), புதிய துறைமுகத்தையும் ஷேக் ஜாயித் சாலையையும் இணைக்கும் நேரடி மேம்பாலம் ஒன்று, பாம் ஜூமைரா மற்றும் புளு வாட்டர் ஐலேண்ட் மெட்ரோ நிலையங்களை இணைக்கும் வகையில் மோனோ ரயில் திட்டம், துறைமுகத்தை பாம் ஜூமைராவுடன் இணைக்கும் நடைபாலம் ஒன்று என பல்வேறு சிறம்பம்சங்களுடன் உருவாகவுள்ளது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-