அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பல விளம்பரங்களில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி பதில் ஏதும் வராமல் இருப்பார்கள்.

வேலை தேடுபவர்கள் பலர் வேலைவாய்ப்பு இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் பல விளம்பரங்களில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி பதில் ஏதும் வராமல் இருப்பார்கள்.

பிறகு ஜாப் ஃபேர் போன்றவற்றுக்குச் செல்ல முயன்று உள்ளே கூட நுழைய முடியாமல் வெளியில் தள்ளப்பட்டிருப்பீர்கள். வேலை வாய்ப்புச் சந்தையில் பல பணிகள் காலியாக உள்ளன. ஆனால் அதில் சேர தான் சரியான ஆட்கள் கிடைப்பதில்லை என்று ஒரு பக்கம் கூறப்பட்டு வந்தாலும் வேலை தேடுபவர்களும் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து ஓய்ந்து இருப்பார்கள்.புதிய வழிமுறைகள்


நம்பிக்கையை விட வேண்டாம். வேலையைத் தேட தேடு பொறிகள், சமுக வலைத்தளங்கள் மற்றும் ஜாப் ஃபேர்கள் தவிர்த்து இன்னும் சில வழிமுறைகள் உள்ளன.

பல நிறுவனங்கள் வளர்ந்து வரும் இணைய உலகில் இணையதளம் மூலமாகவே கலந்துரையாடி நேரடியாக தங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற ஊழியர்களைத் தேர்வு செய்கின்றனர்.
விரிச்சுவல் கரியர் ஃபேர்


உலகின் விரிச்சுவல் கரியர் ஃபேருக்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு வேலை தேடுபவர்கள் தங்கள் நாடு மட்டும் இல்லாமல் பிற நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பணிகளுக்கும் கூடு அந்த நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து தெரிந்துகொண்டு வீட்டில் இருந்த படியே எட்டிப்பிடிக்கலாம். ஆம், விண்ணப்பதாரர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வேலைக்கன நேர்முகத்தேர்வை முடிக்கலாம்.ஆன்லைன் கரியர் நிகழ்வுகள்


ஆன்லைன் கரியர் நிகழ்வுகள் பொதுவாக எல்லா இடங்களிலும் நடக்கும் ஜாப் ஃபேர்கள் போன்றதே காலியிடங்கள் உள்ள நிறுவனங்களைக் கண்டறிந்து தனக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பித்து நேரடியாக நிறுவன ஊழியர்களை இணையம் மூலமாகவே சந்திக்கலாம்.


எளிதாக நிறுவனம் ஊழியர்களுடன் கலந்துரையாடலாம்


இப்படி விரிச்சுவல் ஜாப் ஃபேர்களின் நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் போது எளிதாக நிறுவனம் ஊழியர்களுடன் உரை தகவல், ஆடியோ மற்றும் வீடியோ அரட்டை அல்லது இரண்டும் ஒரே நேரத்தில் செய்யலாம் என்று கூறுகிறார் விஃபேர்ஸ்.காம்(vFairs.com) நிறுவனத்தில் பொது நிர்வாகி முகமது யூனஸ்.ஜாப் ஃபேர்கள்


ஒவ்வொரு வருடமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளவர்களுக்காகப் பல ஆன்லைன் ஜாப் ஃபேர்களை நடத்தி வருகின்றது பேயட்.காம்(Bayt.com). அதில் குறைந்தது 3 ஐக்கிய அரபு அமீரகத்திலும் 6 மத்திய கிழக்கு நாடுகளில் என்பது குறிப்பிடத்தக்கது.


நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆதரவு


ஒவ்வொரு காலாண்டிலும் இது போன்று விர்ச்சுவல் ஜாப் ஃபேர்களில் இணையதளம் மூலம் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை மிகவும் பிரபலமாகி வருவதாக ஒரு இணையதள வேலைவாய்ப்பு இணையதளத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


வேலை தேடுபவர்களின் திருப்தி


வேலை தேடுபவர்களின் திருப்தி அளவுகளும் அதிகமாகவே உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் இருந்து இந்த இணையதள ஜாப் ஃபேர்களில் பங்கேற்கும் 10-ல் 6 பேர் முகவும் திருப்தியாக உள்ளதாகக் கடுத்து தெரிவிக்கின்றனர்.


பேய்ட்.காம் கருத்து


விர்ச்சுவல் ஜாப் ஃபேர்கள் மூலம் வேலைக்குச் சேருவதும், வேலைக்கு ஆட்களை எடுப்பதும் மிகவும் எளிதாக உள்ளது என்று பேய்ட்.காம் தரப்பு கூறுகின்றது.


தனி சிறப்பு


இந்த நிகழ்வுகளின் தனிச் சிறப்பு என்னவென்றால் இந்த நாட்டவர் மட்டும் தான் என்று இல்லாமல் எல்லோரும் பங்கேற்று நேர்முகத் தேர்வின் மூலம் வேலைப் பெறலாம்.


தனியார் முதல் அரசு நிறுவனங்கள் வரை


மேலும் இந்த ஆன்லைன் ஜாப் ஃபேர்கள் பல தரப்பு நிறுவனங்கள் அதாவது சிறு மற்றும் குறு நிறுவனங்களில் இருந்து நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது இன்னொரு சிறப்பு.

Ads by Revcontent


From The Web

110 AED Diet Pill Shocks Dubai Doctors: 12kg In 4 Weeks. How Does It Work?


Invest $200 and Get $800 - $1200 a Day!


Generate A High-Quality User Experience with Revcontent


Join Revcontent To Increase User Engagement and Reach


Google AMP Builds a Better User Experience on Mobile


Patch.com Chooses Revcontent for Superior Ad Quality and User Experience

Read more about:வீடு|வேலை வாய்ப்பு|ஐக்கிய அரபு அமீரகம்
Other articles published on January 11, 2017

PrevNext

Trending Articles

தந்தை சமையலால் யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த தமிழக ...


தங்கத்துடன் எந்த உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன? 24, 22 காரட் ...


டெபிட், கிரெடிட் கார்டு வாங்கலான என்ன பேடிஎம் இருக்கு..!


மாத சம்பளகாரர்களே.. பட்ஜெட் 2017 உங்களுக்கு ஒரு ஜாக்பாட்..!


35% வேலைவாய்ப்புகளை இழந்தது 'இந்தியா'.. இதற்கு என்ன பதில் ...பேடிஎம் வழியாக பணத்தை எப்படி அனுப்புவது அல்லது பெறுவது..? ...


பேடிஎம் செயலியில் பணத்தை ஏற்றி ரூபாய் நோட்டு சிக்கல் இல்லாமல் ...


27,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்..!


173 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ப்ளூ சிப் பங்குகளில் முதலீடு ...


‘399 ரூபாய்’க்கு விமான பயணம் விஸ்தராவின் அதிரடி ஆஃபர்..! ...Read In English
How to get a job in UAE without leaving your home?
Follow GoodReturnsFacebookTwittergPlusAndroidiOs


Sign up to our Newsletter

Home | Oneindia | Apps | Sitemap | Contact Us
© 2017 Greynium Information Technologies Pvt. Ltd.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-