அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 ஹஜ் பயணிகளுக்காக புதிய மொபைல் ஆப்பை மத்திய இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிமுகம் செய்து வைத்தார். 

ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கும் பணி டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதோடு, பிரத்யேக மொபைல் ஆப் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதுபற்றி மத்திய சிறுபான்மையின நலத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

ஹஜ் யாத்திரை விண்ணப்பங்கள் செயல்பாடு முதன் முறையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கான ஒரு ஆரம்ப முயற்சியாகும். ஹஜ் பயணிகளுக்காக புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிப்பது, தகவல் பெறுவது, விசாரணை, இ-பேமென்ட்,  செய்திகள் உள்ளிட்டவை இந்த ஆப்பின் சிறப்பம்சமாகும். 

5 பெரியவர்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் குழுவாக விண்ணப்பிக்கலாம்.  அடுத்த ஹஜ் யாத்திரையின்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கவேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அடுத்த ஆண்டு அதிகமானோர் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-