அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...குவைத் #Kuwait

#FLASH_NEWS......

#குவைத்தில்_இருந்து_அடுத்த_மாதம்_துவங்க_இருந்த_திருச்சி_விமான_சேவை_ரத்து:

குவைத்தில் உள்ள தமிழர்களின் பல ஆண்டுகள் கனவு #குவைத்தில் இருந்து #திருச்சிக்கு விமானம் வேண்டும் என்பது. இதற்கு குவைத்தில் உள்ள பல தமிழக அமைப்புகள் குரல் கொடுத்து வந்த நிலையில்.

இதையடுத்து அடுத்த மாதம் பிப்ரவரி( 02.02.2017) முதல் #Etihad_Airways திருச்சி விமான சேவை துவங்குவதாக இருந்து.#குவைத்திலிருந்து

Etihad விமானம் மூலம் #அபுதாபி சென்று அங்கிருந்து #ஜெட்_விமானம் மூலம் #திருச்சி வரை செல்வதற்கு ஏற்பாடுகள் நடந்து அதனை மக்கள் மத்தியில் அறிவிப்பும் செய்யப்பட்டது.இதற்கு பலர் முன்பதிவும் செய்தனர்.

ஆனால் சதிவலை காரணமாக தீடிரென விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.இதன் பின்னனியில் இலங்கை அரசு இருப்பதாக சொல்லப்படுகிறது.தீடிரென விமான சேவை இரத்தானதால் இந்த விமானம் மூலம் செல்வதற்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகி இருக்கின்றனர்

திருச்சிக்கு விமானம் குவைத்தில் இருந்து செல்வது குறித்து மகிழ்ந்த தமிழர்களுக்கு மன வேதனையை அளித்துள்ளது. குவைத்திலிருந்து திருச்சி செல்ல பதிவு செய்யப்பட்டிருந்த நபர்களுக்கு டிராவல்ஸ் ஏஜெண்டுகள் பணத்தை திருப்பி தருவதாக சொல்லி உள்ளனர்.

தமிழர்களுக்கு தான் எல்லா இடங்களிலும் பிரச்சனை.மீண்டும் தமிழக அமைப்புகள்

நேரடி விமான சேவை திருச்சிக்கு தர வேண்டி போராட வேண்டிய அவல நிலை.மத்திய மாநில இந்திய அரசு ஏன் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வில்லை என்பது

புரியவில்லை.

பதிவு: Kuwait-தமிழ் பசங்க Reporting by: நெல்லை மரைக்காயர் அண்ணா( சமூக ஆர்வலர்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-