அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கன்னியாக்குமரி மாவட்டம் அடைக்காக்குழியை சேர்ந்த செல்வன் நல்லதம்பி என்பவர் சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 21/12/2016 அன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இந்த நிலையில் என்ன செய்வது என்று அறியாத அவரது குடும்பத்தினர் இருந்த நிலையில் சவுதி அரேபியா ரியாத்தில் வேலை செய்யக்கூடிய அவரது அண்ணன் திரு. ஜான்சன் நல்லதம்பி அவர்கள் இந்தியன் சோசியல் போரம்இன் ரியாத் மண்டல நிர்வாகிகளை தொடர்பு கொண்டார், இதனை தொடர்ந்து இந்தியன் சோசியல் போரம் இன் நிர்வாகிகளின் துரிதமான நடவடிக்கைகளால் இந்திய தூதரகத்தின் உதவியுடன் சட்டரீதியான அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டு அவரது உடல் 30/12/2016 அன்று சவூதி அரேபியாவில் இருந்து தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது ,நேற்று 31/12/2016 அன்று தாயகம் வந்தடைந்த அவரது உடலை கன்னியாக்குமரி மாவட்ட SDPI நிர்வாகி சகோ. சுல்பி அவர்களின் முன்னிலையில் பெற்றுக்கொண்டு சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா- வின் ஆம்புலன்ஸில் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவரது உடலை பெற்றுக்கொண்ட அவரது அவரது உறவினர்கள் SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கும், இந்தியன் சோசியல் ஃபோரம்-ன் நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.
மேலும் சவூதி அரேபியாவில் கடுமையான வேலை சுமையையும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் ஜாதி மதம் அத்தனையும் தகர்த்தெறிந்து இப்பணியை மேற்கொண்ட சகோதரர்கள் அணைவருக்காகவும் அவர்களது பணி மென்மேலும் சிறப்படையவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-