அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இன்று 2017ம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து உலகம் முழுவதும்  வண்ண மயமான கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 

உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும்  துபாயில்  புர்ஜ் அல் அரப் ஹோட்டல்,பாம் ஜுமைரா , உலகின் உயரமான கட்டிடம் 'புர்ஜ் கலீஃபாவில்'உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக‌ செய்யப்பட்டிருந்தன.

இக்காட்சிகளை பார்வையாளர்கள் நேரடியாக‌ காண்பதற்கு வசதியாக துபாயில் ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

புத்தாண்டின் முதல் நிமிடம் தொடங்கிய உடன் துபாயில் வண்ண மயமான வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் புர்ஜ் அல் அரப்  ஹோட்டல் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.  

LED விளக்குகளால் ஆன திரையில் புர்ஜ் கலீஃபா  கட்டிடம் முழுவதும் நிறம் மாறி வண்ணமயமாக‌ காட்சியளித்தது.. புர்ஜ் கலிபா கட்டிடம் ,பாம் ஜீமைரா தீவு, அமைந்துள்ள பகுதிகள் அருகில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் இந்நிகழ்வுகளை நேரடியாக கண்டு களித்தனர். 

துபாயில் புத்தாண்டு நிகழ்ச்சிகளைக் காண உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். 0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-