அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், ஜன-04
துபை போக்குவரத்து துறையால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் வெள்ளை, சிவப்பு கலந்த நிறத்திலேயே வலம் வரும், இதற்கு நேர்மாறாக மெட்ரோ ரயில்கள் நீள வண்ணம் பூசப்பட்டிருக்கும்.

துபை போக்குவரத்து துறையின் பேருந்துகள் பல்வேறு வகையான சேவைகளை வழங்குகின்றன. 


குறிப்பாக 24 மணிநேர சேவை, நட்சத்திர ஹோட்டல்களுக்கு என்று தனி சேவை, மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கிடையேயான சேவைகள் என்பன பல.

இந்நிலையில், பயணிகள் மெட்ரோ நிலையங்களுக்கான பேருந்து சேவைகளை எளிதாக அடையாளம் காணும் வகையிலும், மெட்ரோ ரயில்களின் வண்ணத்தை பிரதிபலிக்கும் வகையிலும் சுமார் 186 பேருந்துகளுக்கு நீள வண்ணம் பூசப்படவுள்ளது, முதற்கட்டமாக இதுவரை 70 பேருந்துகளுக்கு நீளச்சாயம் அடிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
Source: Emirates 247

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-