அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், ஜன-02
துபாயில் நிலவும் கடும் மூடுபனியால் தொடர்ந்து இரண்டாவது நாளாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்களின் வருகை தாமதமாகின மேலும் பல விமான புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று (திங்கட்கிழமை) பகல் வரை முழு அமீரகத்தையும் பனி போர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது, இன்றும் அதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை போக்குவரத்தும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, துபைக்கு வரவேண்டிய 28 விமானங்கள் தாமதமாக வருகின்றன, இவை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஓமன் மற்றும் குவைத்திலிருந்து வரவேண்டிய விமானங்கள். மேலும், பிளைதுபையின் 9 விமான புறப்பாடுகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன, நேற்று மட்டும் 21 விமான சேவைகளை பிளைதுபை ரத்து செய்திருந்தது.

ஓவ்வொரு ஆண்டும் ஆங்கில வருடப் பிறப்பின் முதல் வாரம் எப்பொழுதுமே துபை வரும் பயணிகளால் விமான நிலையங்கள் பரபரப்பாக காணப்படும் நிலையில் விமான ரத்துக்கள் பயணிகளுக்கும் விமான சேவை நிறுவனங்களுக்கும் பல இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன என்றாலும் துபை சர்வதேச விமான நிலையங்கள் வழியாக ஜனவரியின் முதல் 3 நாட்களுக்குள் சுமார் 2.5 லட்சம் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-