அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வளைகுடா நாடுகளில் விருந்தோம்பலில் முன்னிலையில் இருப்பவர்கள் சில நல்ல அரபியர்கள் நோன்பு காலம் ஆரம்பித்தால் நோன்பாளிகளுக்கு எவ்வாறு உணவு கொடுப்பார்கள் என்பதை வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தெரியும்.

தற்போல உலகில் பணக்கார நாடாக இருக்கும் கட்டாரில் பரவலாக இந்த நிலைகைக் காணமுடியும். 

அது மட்டுமல்லாது ஏழை நாடுகளுக்கு உதவுவதிலும் கட்டார் முன்னிலை வகிக்கின்றது. அந்த வகையிலு சிரியாவில் உள்ளநாட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்மையில் கத்தார் தேசிய தினத்தை ரத்து செய்து. 

அந்த தினத்தில் 6 மணி நேரத்தில் பல ஆயிரம் மில்லியன் ரியால்களை வசூலித்து செய்த உதவிகளை நினைவு கூற முடியும்.

அது மட்டுமல்லாது அங்குள்ள  ஏழைகள், சாலையில்  செல்லும்  நபர்களுக்கு  குடிப்பதற்காக வெளியில் குடிநீருக்கான வசதிகளை ஏற்படுத்தி வைத்திப்பார்கள். 

அந்த தொடரில் கட்டாரில் இருக்கும் பிரபல அன்சார் கல்லரி என்னும் சூப்பர் மார்க்கட் அண்மையில் Al Rawdha பகுதியில் புதிய கிளையை  திறந்து வைத்தது.

மேற்படி ANSAR GALLERY யில் தான்  “free food for those who had no money to buy food or unemployed”
“பணம் இல்லாதவர்களுக்கும், தொழில் இல்லாதவர்களுக்கு இலவச உணவு”வசதியை  ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மேற்படி உணவுகளில்,டின்னில் அடைக்கப்பட்ட மீன்கள்,
குப்ஸ்கள்,
யோகட்டுக்கள்,
நூடுல்ஸ்,
பிஸ்கட்கள் மற்றும்
பால் பாட்டில்கள்  என பலதரப்பட்ட பொருட்கள் இருப்பதை பார்க்க  முடிகின்றது.

இது போன்ற மனிதபிமான செயற்பாடுகள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியதாகும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-