அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜன-07
சவூதியில் குழந்தை பருவத்திலேயே பல சிறார்கள் கார் ஒட்டுவதற்கு பழகிவிடுவர் இதற்கு காரணம் தந்தைமார்கள் தங்களின் மடியில் குழந்தைகளை அமர வைத்துப் பழக்குவதே என்றாலும் தனியாக ஒட்ட அனுமதிக்க மாட்டார்கள்.

சவுதியின் புதிய போக்குவரத்து சட்டப்படி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை முன்னிறுக்கையில் வைத்திருப்பதற்கோ அல்லது மடியில் வைத்துக் கொண்டு கார் ஓட்டுவதற்கோ இனி அனுமதியில்லை, முதல்முறை பிடிபடுபவர்களுக்கு சுமார் 150 முதல் 300 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தை செய்பவர்கள் போக்குவரத்து நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்கடுவர்.

கடந்த 2016 அக்டோபர் மாதம் கொண்டு வரப்பட்ட போக்குவரத்து சட்ட மாற்றங்களின் அடிப்படையில்,
1. சட்டத்திற்கு புறம்பான முறையில் கார் நம்பர் பிளேட்டை பயன்படுத்தினால் ரியால் 3,000 அபராதம். (illegally using car number plates)

2. சிக்னலை மீறினால் ரியால் 3,000 முதல் 6,000 வரை அபராதம்.(Running over red signal)

3. வாகன அனுமதியை பிறரிடம் கொடுத்தால் குறைந்தபட்சம் ரியால் 1,000 மற்றும் அதிகபட்சம் ரியால் 2,000 வரை அபராதம். (Giving vehicle registration card to any person)

4. டிரைவர் அனுமதியை பிறரிடம் கொடுத்தால் குறைந்தபட்சம் ரியால் 1,000 மற்றும் அதிகபட்சம் ரியால் 2,000 வரை அபராதம். (Giving driver license to any person)

5. டிரைவர் அனுமதியை பிறரிடம் உத்திரவாதத்திற்கு ஈடாக கொடுத்தால் குறைந்தபட்சம் ரியால் 1,000 மற்றும் அதிகபட்சம் ரியால் 2,000 வரை அபராதம். (Giving driver license to any person as guarantee)

6. விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கு நிற்காமல் ஓடினால் 3 மாதம் சிறை அல்லது ரியால் 10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். (Leaving accident scene without informing to the traffic authorities)

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-