அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜித்தா(08 ஜன 2017): வெளிநாட்டினரை அவமதிக்கும் வகையில் எந்த செயல்களையும் செய்யாதீர்கள் என்று சவூதி நாட்டினருக்கு அந்நாட்டு பிரபல பத்திரிகையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சவூதி அரேபியாவின் பிரபல நாளிதழின் தலைமை செய்தியாளர் காலித் அல் மஇனா. இவர் எழுதும் தலையங்கங்கள் அனைவராலும் போற்றப்படும். அந்த வகையில் சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு ஆதரவாக பல நிலைகளில் குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது பத்திரிகையில் அந்நாட்டினருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் " வெளிநாட்டினரை அவமதிக்காதீர்கள். அவர்கள் இந்நாட்டிற்கு பணிபுரிய வந்தவர்கள். அவர்களுக்கு இங்கு சொந்த வீடோ நிலமோ கிடையாது. அவர்கள் பாராசூட்டில் வது குதித்தவர்கள் கிடையாது. முறையாக அரசு அனுமதித்துள்ள விசாவில் வந்தவர்கள். சவூதியின் பெரும்பாலான பொருளாதார, மற்றும் இதர வளர்ச்சியில் அவர்களது பங்கு மிகவும் முக்கியமானது. எனவே அவர்களை அவமானப்படுத்தும் எந்த செயலையும் செய்யாதீர்கள்" என்று அந்த கோரிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-