அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கை.களத்தூரில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

திறப்பு விழா

இதனை தொடர்ந்து கை.களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலுள்ள இளைஞர் பயிற்சி மைய கட்டிடத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கினார். தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து, இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

மாநில நலவாழ்வு குழு இயக்குனர் டாக்டர் தரேஸ் அஹமது, சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் பேசினார்கள்.

மருத்துவ முகாம்

தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ முகாமில் கை.களத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்து கலந்து கொண்ட 1,367 பேருக்கு இலவசமாக சிகிச்சையளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப் பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வீட்டு வசதி கடன் சங்க தலைவர் முத்துசாமி, நிலவள வங்கி தலைவர் கண்ணுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-