அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மக்கா: கடந்த ஆண்டு தங்களுடைய சம்பளம் வழங்கப்படாதபோது, போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு சிறை தண்டனையும், கசையடிகளும் வழங்கப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

45 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையிலான சிறை தண்டனையை மக்காவிலுள்ள நீதிமன்றம் ஒன்று சுமார் 50 தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளதாக சவுதி செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன.சிலருக்கு 300 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளன.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவுதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோது, பல மாதங்கள் அதிக அளவிலான தொழிலாளர்களுக்கு சம்பளம்  வழங்காத சவுதி பின்லாடின் என்ற கட்டுமான ஜாம்பவான் நிறுவனத்தோடு தொடர்புடைய வழக்கு இதுவாகும். 

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல பேருந்துகள் கோபமடைந்த தொழிலாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-