அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உலகின் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா எதிர்வரும் 2017 பிப்ரவரி மாதத்தில் ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி கச்சா எண்ணெய் விலையை உயர்த்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரப் லைட் (Arab light) எனப்படும் கச்சா எண்ணெயின் பேரல் ஒன்றின் மீது சுமார் 50 சென்டுகளும் (Cents) (அரை டாலர்) அரப் ஹெவி (Arab Heavy) எனப்படும் கச்சா எண்ணெயின் மீது சுமார் 90 சென்டுகள் முதல் 1 டாலர் வரை உயரக்கூடும், இந்த விலையேற்றம் உலகிலேயே அதிகளவில் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளுக்கு மட்டுமே.

ஆசிய நாடுகளுக்கு விலையை ஏற்றும் அதேவேளையில் ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியையும் அதிகரித்து தரவும் ஒப்புக்கொண்டுள்ளது, இதனால் பல ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் அளவை குறைக்கவுள்ளது.

பெட்ரோல் உற்பத்தி நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட சமீபத்திய உடன்படிக்கையின் படி 2017 ஜனவரி மாதத்தில் தனது மொத்த உற்பத்தியில் நாள்தோறும் 486,000 பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து சவுதியின் தினசரி உற்பத்தி 10.058 மில்லியன் பேரல்களாக குறைந்துள்ளன.

ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதியில் கச்சா எண்ணெய்க்கான விலையை சவுதி அறிவிக்கும் அதனை தொடர்ந்தே மற்ற ஏற்றுமதி நாடுகளான ஈரான், குவைத், ஈராக் போன்ற நாடுகள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலையை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

 இதனால் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சுமார் 12 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் விலையில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

Source: Reuters / Msn

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-