அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜன-18
துபையில் கராமாவிலும், அல் பர்ஸாவிலும் செயல்படும் உணவகங்கள் நோம் நோம் ஆசியா ரெஸ்டாரண்ட் (Nom Nom Asia Restaurant). இங்குள்ள ஓர் அறிவிப்பு பலகை கண்டிப்பாக உங்களை இதன் உரிமையாளர்களான விவேக் பழனி (Vivek Balaney) மற்றும் சஞ்சய் மோகன் (sanjay Mohan) ஆகியோரை மனதார வாழ்த்தவே செய்யும்.

துபையில் வேலை தேடும் எவரும் தங்களிடம் பணமில்லாவிட்டாலும் இந்த உணவகத்தில் விரும்பிய மதிய உணவை ( Free Lunch ) கேட்டு வாங்கி சாப்பிடலாம், உங்களுக்கு இலவசமாக உணவை ஏற்பதில் மன சங்கடம் உள்ளதா? உங்களுக்கு வேலை கிடைத்து சம்பளம் கிடைத்தவுடன் கொடுத்து விடுங்கள் என அனுமதியளித்துள்ளனர்.

அமீரக அரசு 2017 ஆம் ஆண்டை 'கொடுத்து மகிழும் ஆண்டு' (Year of Giving) என அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த ஒரு வருடமாகவே அல் பர்ஸா (Al Barsha) கிளையும், கடந்த ஜூன் மாதம் முதல் கராமா (Karama) கிளையும் பசிப்பிணியாற்றி வருகின்றன.

பொதுவாக மாற்றுத் திறனாளிகள் மீது மக்கள் அதிக இரக்கம் கொள்வது இயல்பு ஆனால் பசியுடன் வேலை தேடிவரும் ஒருவருக்கு இத்தகைய இயல்பான உதவிகள் கிடைக்காது. எனவே தான் இந்த இலவச உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம் என்றும் வேலை கிடைத்தப்பின் பலர் உணவுக்கான கட்டணத்தை திருப்பி செலுத்துவதுடன் வேலை கிடைத்த சந்தோஷத்தை நன்றியுடன் தங்களிடம் உளப்பூர்வமாக பகிர்ந்து கொள்வது, பலர் வாழ்த்துவதும் மனநிறைவு தருவாதாக கூறுகின்றனர் இதன் உரிமையாளர்கள். மேலும், தங்களால் இயன்றவரை இத்திட்டத்தை தொடரவும் உறுதிபூண்டுள்ளனர்.

விவேக் பழனி அவர்களையும் சஞ்சய் மோகன் அவர்களையும் நாங்களும் மனதார வாழ்த்துகிறோம்.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்: நம்ம ஊரான்0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-