பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக எஸ்பி சோனல்சந்திரா உத்தர வின்பேரில் பெரம்பலூர் நகரில் நேற்று ஹெல்மெட் விழிப்புணர்வுப்பேரணி நடத்தப்பட்டது.
இதனையொட்டி புதுபஸ்டாண்டில் இருந்து விழிப்புணர்வுப் பேரணியை பெரம்பலூர் டிஎஸ்பி கார்த்திக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு எஸ்ஐ பெரியசாமி, ஆயுதப்படை எஸ்ஐ பத்மநாபன் மற்றும் ஏட்டுகள், போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட சுமார் 40 பேர் கலந்துகொண்ட னர்.
புதுபஸ்டாண்டில் தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணி பாலக்கரை, சங்குப்பேட்டை, பெரியகடைவீதி, கனராவங்கி, பழையபஸ்டாண்டு, காமராஜர் வளைவு வழியாக மீண்டும் புதுபஸ்டாண்டில் முடிவடைந்தது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.