அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மருத்துவமனையில் நோயாளிகள் இருக்கும் அறை அல்லது அவசர சிகிச்சை பிரிவுக்குள் மொபைல் போன்களை யாரும் எடுத்துச் செல்ல வேண்டாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளை பாதிக்கும்:

இது தொடர்பாக ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் கூறியதாவது: மொபைல் போன்களில் அதிக அளவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் காணப்படுவதால், அவைகள் எளிதில் நோய்களை பரப்பக் கூடியவை. அதனால் மருத்துவமனைகளுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்பது நோயாளியை கடுமையாக பாதிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். டாக்டர்களும், நர்ஸ்களும் கூட மருத்துவமனைக்குள் மொபைல் போன்களை கொண்டு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். மொபைல் போன்களில் காணப்படும் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் மீதும் கிருமியை உருவாக்கும் திறன் கொண்டவை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட 3 ஆய்வுகளின் அறிக்கைகள் சமீபத்தில் திருப்பதியில் நடந்த அறிவியல் மாநாட்டில் வெளியிடப்பட்டன. மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் பயன்படுத்தும் மொபைல் போன் கீபோர்டுகளில் இருந்து மட்டும் ஏறக்குறைய 100 பாக்டீரியா குழுக்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. முறையாக கைகளை சுத்தம் செய்யாமல் மொபைல் போன்களை பயன்படுத்தும் போது, மொபைல் போன் டிவைஸ்களில் ஏற்கனவே உள்ள பாக்டீரியாக்களுடன், இவைகளும் இணைந்து நோய் கிருமிகளை எளிதில் ஏற்படுத்துகின்றன என தெரியவந்துள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-