அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


2016 டிசம்பர் மாதம் ஜில்லென்ற அதிகாலை 3.51 மணியளவில் அமீரக – சவுதி எல்லையான 'குவைபத்' (Gweifat) நகரிலிருந்து நடக்கத் துவங்கினார்.

நோக்கம் அமீரகத்தின் 7 எமிரேட்டுகளையும் 7 நாட்களில் நடந்தே கடக்க வேண்டும், இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் மீதான மக்களின் கரிசனத்தை அதிகரிக்கச் செய்வதுடன் கின்னஸ் சாதனையையும் நிகழ்த்த வேண்டும் என்பதே.

தினமும் சுமார் 5 முதல் 6 மணிநேர தூக்கத்துடன் நடந்தவருக்கும் அவருடைய 2 உதவி வாகனங்களுக்கும் அமீரகத்தில் நிலவும் சீதோஷ்ணநிலை ஒத்துழைக்கவில்லை. 

மணல் புயல், அமீரக சவுதி சாலைப்பணிகள், குளிர், ஒழுங்கற்ற பாதை என்பதுடன் உதவி வாகனமும் படுத்துக் கொண்டது அவரது நடைபயண திட்டத்தை நீட்டியது.

கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோற்றாலும் தொடர்ந்து நடந்தார் 30 வயது அமீரக இளைஞர் 'ஜலால் பின் தானியா' உதவி வாகனங்கள் மாற்றப்பட்டதுடன் குளித்து ஓய்வெடுக்க 'மோட்டர்ஹோம்' எனப்படும் சொகுசு வாகனமும் பிற்பாடு ஸ்பான்சர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு வாரம் இரு வாரங்கள் ஆகிய நிலையிலும் தொடர்ந்து சுமார் 850 கி.மீ தூரம் நடந்து நேற்றிரவு 8.28 மணியளவில் புஜைரா கடற்கரையில் திட்டமிட்டபடி நடைபயணத்தை நிறைவு செய்தார்.

கின்னஸ் நிறுவனம் வரையறுத்த 712 கி.மீ  என்ற 7 அமீரக நடைபயண தூரம் என்பது பேப்பர் கணக்குகளில் மட்டுமே சாத்தியம், மொத்த பயண தூரம் கிட்டதட்ட 900 கி.மீ.க்கு நெருக்கத்தில் இருக்கும் என வாதிடும் ஜலாலும் அவர் நண்பர்களும் நடைபயணம் குறித்த முழுமையான தகவல்களை கின்னஸ் நிறுவனத்தின் ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.


Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-