அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சி, ஜன.6

கொழும்பு விமான நிலைய ஓடு தளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கொழும்பு விமான நிலையம் மூடப்படுவதையொட்டி திருச்சி- கொழும்பு இடையே தினமும் ஒரு விமான சேவை மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் குளிர் கால அட்டவணைப் படி இலங்கை தலை நகர் கொழும்புவில் இருந்து 2 விமான சேவை இயக்கப்படுகிறது. அதன் படி கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு காலை 8.40 மணிக்கு ஒரு விமா னம் வந்து 9.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதே போல மாலை 3.05 மணிக்கு ஒரு விமானம் வந்து 4.05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இந் நிலையில் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. இது குறித்து லங்கன் ஏர் லைன்ஸ் அதி கா ரி கள் கூறுகையில், கொழும்பு விமான நிலை யத் தில் உள்ள விமான ஓடு த ளம் இன்று (6ம் தேதி) முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடை பெறவிருப்பதால் கொழும்பு விமான நிலையம் மூடப்படுகி றது.

இதையடுத்து கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் தின சரி 2 விமான சேவையானது ஒரு சேவையாக குறைக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் இருந்து காலை 8.40 மணிக்கு திருச்சி வரும் விமானம் திருச்சி விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-