அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாயில் புதிய டிரைவர்களால் மட்டும் 49 பேர் மரணம் !

 ஜன-29
துபையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் 198 பேர் டிலைவர்களால் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 49 பேர் ஒரு வருடத்திற்கும் குறைவான அனுபவமுள்ள டிரைவர்களால் நிகழ்ந்தவை என்பதுடன் இவர்களில் பெரும்பாலோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்த டிரைவர்கள். மேலும், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 32 பேர் மட்டுமே புதிய டிரைவர்களால் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 20 வயது முதல் 40 வயதுடைய புதிய டிரைவர்களால் இந்த விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்திய மற்றும் பாகிஸ்தானிய புதிய டிரைவர்களால் தலா 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இமராத்தி டிரைவர்களால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய விபத்துக்களை எற்படுத்தும் டிரைவர்களில் பெரும்பாலோர் அதிகநேரம் பணியிலிருக்கும் டிரக் மற்றும் டெலிவரி வாகன டிரைவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை 16 வருடம் அனுபவமுள்ள டிரைவர்கள் கூட 24 உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர் என்றாலும் இதுவே 2015 ஆம் ஆண்டு 18 என்ற எண்ணிக்கைக்குள் இருந்தது. விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-