அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

: ஜன-15. துபை விமான நிலையத்தில் மிட்டாய் திருடித் தின்றவருக்கு 3 மாதம் சிறை என தலைப்பை விரிவாக விளங்கிக் கொள்ளவும்.

திருடர்கள் பலவகை அதில் இந்த துபை விமான நிலையத்தில் விமானத்தில் லக்கேஜ்ஜூகளை ஏற்றும் பிரிவில் பணியாற்றி வந்த போர்ட்டர் ஒரு வகை. இவர் திருடுவதெல்லாம் பயணிகளின் பேக் ஜிப்பை திறந்து சாக்லெட் போன்ற மிட்டாய் வகைகளை மட்டுமே.

பலருடைய பேக்குகளை திறந்து மிட்டாய் வகைகளை திருடிவந்த இந்த பலநாள் 'சுவீட் கள்ளன்' ஒருநாள் சிசிடிவி வழியாக பிடிபட்டான். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இந்த மிட்டாய் திருடன் 'மை லார்ட்' நான் திருடியதெல்லாம் மிட்டாய்கள் மட்டுமே, வேறு எந்த விலை மதிப்புள்ள பொருளையும் திருடியதில்லை, திருடிய மிட்டாய்களை கூட உடனுக்குடன் தின்றுவிடுவேன் என ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டான்.

அப்புறம் 3 மாத சிறை தண்டனைக்கு பின் வேலையிழந்து நம்ம பக்கத்து நாட்டுக்கு திரும்ப வேண்டியது தான்.

Source: Syndicate.info / Msn
தமிழில்: 
அதிரை நியூஸ்நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-