அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், ஜன-03
ஜாப் டிரேக்கர், மான்ஸ்டர்.காம் போன்ற ஆன்லைன் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் ஆய்வறிக்கையின்படி, அமீரகத்தில் கடந்த 2015 நவம்பர் மாத நிறைவுடன் ஒப்பிடுகையில் 2016 நவம்பர் மாத நிறைவில் சுமார் 35 சதவிகித வேலைவாய்ப்புக்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு குறைவிற்கு பெட்ரோல் விலைவீழ்ச்சியே பிரதான மறைமுக காரணியாக கணக்கிடப்படுகிறது.

வங்கிகள், நிதி சார் சேவைகள், இன்ஸூரன்ஸ் போன்ற துறைகளே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும் கொள்வணவு செய்வோர் (Purchase), இடப்பெயர்வு மேலாண்மை (Logistic Management), விநியோகம் சார் பொறுப்புக்கள் (Supply Chain Roles) போன்ற துறைகளில் சுமார் 19 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதுடன் பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவுவதாலும் 2017 ஆம் ஆண்டில் அதிக வேலைவாய்ப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Hays தெரிவித்துள்ள தகவலின்படி வங்கி, இன்ஸூரன்ஸ், நிதி போன்ற துறைகளில் சுமார் 39 சதவிகிதம், சேவை துறைகளில் 37 சதவிகிதம், வர்த்தகம், சில்லறை வணிகம், இடப்பெயர்வு மேலாண்மை போன்ற துறைகளில் சுமார் 35 சதவிகிதம் வேலைவாய்ப்புகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மிகக்குறைந்த அளவு பாதிக்கப்பட்டுள்ள துறைகளாக -1 சதவிகிதம், உற்பத்தி, வாகனம் மற்றும் அதன் துணைத்துறைகளில் -8 சதவிகிதம், ரசாயனம், பிளாஸ்டிக், ரப்பர், உரம், பூச்சி கொல்லிகள் தயாரிப்பு நிறுவனங்களில் -8 சதவிகிதம் என வேலைவாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

The Employment Index ஆய்வின்படி, சுமார் 55 சதவிகித தொழிற்சார் வல்லுனர்கள் தற்போது தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் எந்த முன்னேற்றமும் இருக்காது என நம்பி வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடங்களுக்கு நிச்சயமாக மாற்று ஊழியர்கள் தேவைப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-