அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






பெரம்பலூர்: காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் 30ம் தேதி நடக்கிறது என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :காஸ் சிலிண்டர் மறுநிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவு செய்த குறைகளின்மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனபோக்கு தொடர்பாக வரப்பெறும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குஉட்பட்டு காஸ் சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம்தேதி மாலை 4 மணிக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் குறைதீர் கூட்டஅரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். காஸ் நுகர்வோர் காஸ் சம்பந்தமான குறைகள் இருப்பின், இதில் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என்றும், காஸ் விநியோகம் தொடர்பாகக் காணப்படும் குறைபாடுகளைக் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-