அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஷார்ஜா #Sharjah #Flash_Newsஷார்ஜாவில் இந்தியர் ஒருவர் நடத்தி வந்த மரவேலை(Woodwork Shop) கடை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் சிக்கி மூன்று இந்தியர்கள் உடல் கருகி அடையாளம் தெரியாத வகையில் பலியானார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு நிஜாமுதீன், ஹுசைன் மற்அ ஷிஹாப் என்பது ஆகும்.

இதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இதன் பக்கத்திலேயே தங்கும் வசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.கடையில் பிடித்த தீ பரவி இவர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலும் பரவியது.இதன் காரணமாக இவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்த கடையினை நடத்தி வந்தவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்.

முதல்கட்ட தகவல் படி இந்த விபத்து மின்கசிவால் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இறந்தவர்கள் அனைவருமே கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இன்று வெள்ளிகிழமை விடுமுறை என்பதால் அனைவரும் அயந்து தூங்கிய நிலையில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்கள் உடல்கள் Kalba மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
Reporting by:Kuwait-தமிழ் பசங்க

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-