அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஜித்தா(06 ஜன 2017): இந்திய ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்காவில் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதால் ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை சவூதி அரசு 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைத்து வைத்திருந்தது. இந்நிலையில் இவ்வருடம் முதல் ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சவூதி அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கும் சவூதிக்குமிடையேயான ஹஜ் ஒப்பந்தம் இம்மாதம் 11 ஆம் தேதி கையெழுத்தாகவுள்ளது. இந்த தகவலை இந்தியா ஹஜ் கான்சல் ஷாஹித் ஆலம் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத நிகழ்வில், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஹஜ் கமிட்டி சேர்மன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். இதில் இந்தியாவுக்கான ஹஜ் யாத்ரீகர்களின் கோட்டாவை அதிகரிக்க வேண்டி இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்து 36 ஆயிரமாக உள்ளது. இது இவ்வருடம் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-