அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஜித்தா(12 ஜன 2017): 2017 ஆம் ஆண்டுக்காண இந்திய ஹஜ் பயணிகளின் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவிற்கும், சவூதிக்குமிடையேயான ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான விசா ஒப்பந்தம் நேற்று முன் தினம்(புதன்கிழமை) கையெழுத்தானது. இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, சவூதி ஹஜ், உம்ராவுக்கான அமைச்சர் முஹம்மது சாலிஹ் பந்தன் ஆகியோர் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் ஹஜ், உம்ரா விசா ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய ஹஜ், உம்ரா பயணிகளின் எண்ணிக்கை 1,36,020 முதல் 1,70,025 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது, சவூதிக்கான இந்திய தூதுவர் அஹமது ஜாவித், மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் சவூதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஏர்.இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடுகளை குறிப்பாக இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு சிறப்பாக செய்திருந்தமைக்காகவும் எதிர்காலங்களில் இதே ஒத்துழைப்பை தொடர்வதற்காகவும், சவூதி அரசிற்கு மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Saudi Arabia and India signed the Annual Bilateral Haj Agreement for Haj 2017 .

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-