அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதி அரேபியாவில் கொலை, போதை மருந்து கடத்தல், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக மரணதண்டனைகள் வழங்கப்படுகின்றன. 

இதில் கடந்தாண்டு மட்டும் சர்வதேச மன்னிப்பு சபை தகவலின் படி 153 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் 158 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்தாண்டு குறைவுதான் என்று கூறப்படுகிறது. இதில் 47 பேர் கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் பயங்கரவாத குற்றங்களுக்காக சாகடிக்கப்பட்டுள்ளனர். 

இருப்பினும் போதை மருந்து கடத்துதல் மற்றும் கொலை போன்ற வழக்குகளிலே அதிகமானோர் மரணதண்டனைக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு மரணதண்டனைகள் ஒரு வாள் கொண்டு குற்றவாளியின் தலையை துண்டாக வெட்டி நிறைவேற்றப்படுகின்றன. 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-