அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஜன-04
சாதனையாளர்கள் அனைவரும் பலசாலிகளாக, ஹீரோ தொப்பி அணிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சிலவேளை நேப்பி (Nappy - குழந்தைகளுக்கான சுகாதார கீழாடை) அணிந்தவர்கள் கூட சாதனை நிகழ்த்தும் பெரிய ஹீரோக்களாக முடியும் என நிரூபித்துள்ளது ஒரு சம்பவம்.

அமெரிக்காவின் 45வது மாநிலமான உடாஹ் (Utah) மகாணத்தை சேர்ந்தவர்கள் பவ்டி (Bowdy), புரோக் (Brock) என்ற 2 வயது இரட்டைச் சிறுவர்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களில் சிறுவன் புரோக் மீது துணிகளை வைக்கும் அலமாரி விழுந்துள்ளது. அலமாரி விழும் சத்தம் கேட்டு அவர்களது தாய் வருவதற்குள் இரட்டையர்களில் மற்றொருவனான பவ்டி தனது பிஞ்சு உடலின் பலம் அனைத்தையும் உபயோகித்து அலமாரியை அப்புறப்படுத்தி தனது சகோதரனை மீட்டுள்ளான். (இரத்த பாசத்திற்கு ஈடேது)

அலமாரி தன் மேல் விழுந்தும் அழாத சிறுவனுக்கு காயங்களும் ஏற்படவில்லை. மேலும் தாய் வரும் போது மீண்டும் இருவரும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். எனினும், மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் சான்றளித்தனர்.

வீடியோ: 
 

Source: Mailonline

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-