அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெலாந்துறை, முத்துகிருஷ்ணாபுரம், கொத்தட்டை, ஆகிய கிராமங்களை சேர்ந்த ஜெயா (50), சம்பூரணம் (60), மணிமேகலை (40), பூபதி (50), முருவாயி (45), ஜோதி (45), கருத்தமணி (45), ஜோதிமணி (45), வசந்தி (40), அம்பிகா (35), கோசலை (50), சுமதி (45), கனகாம்பரம் (35), அனுசுயா (20), 15 கூலி தொழிலாளிகள் ஒரு லோடு ஆட்டோவில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காரைப்பாடி கிராமத்திற்கு பருத்தி எடுப்பதற்காக இன்று காலை வந்தனர். லோடு ஆட்டோவை பாக்கியராஜ் (40) என்பவர் ஒட்டி வந்தார் கூலி தொழிலாளிகள் கூலி வேலையை முடித்துவிட்டு மாலை மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்ப ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வயலூர் கிராமம் சின்னாறு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது லோடு ஆட்டோ டிரைவர் பாக்கியராஜின் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் பள்ளத்தில் எதிர்பார விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

கூலி தொழிலாளிகள் ஒருவர் மீது ஒருவராக கிழே விழுந்தனர். இந்த விபத்தில் லோடு ஆட்டோவில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர் உடனடியாக அவர்களை முதலுதவி சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். இச்சம்பவம் தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-