அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கத்தாரில் கடந்த 2012 ஆம் ஆண்டு ரம்ஜான் மாதத்தில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்மணியை திருட்டு முயற்சியில் குத்திக் கொலை செய்தார் என்ற  வழக்கில் வீட்டு வேலைக்காரி கொடுத்த அடையாளங்களை வைத்து மூன்று இந்தியர்கள்(தமிழர்கள்) கத்தார் போலீசார்  கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் அந்த வீட்டின் பக்கத்தில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த செய்தி அந்த நாட்களில் வளைகுடா மற்றும் தமிழகத்தில்  பரபரப்பான பேசப்பட்டது.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு; செல்லதுரை பெருமாள், அழகப்ப சுப்பிரமணியன் மற்றும் சிவகுமார் ஆகிய மூவர் ஆவார்கள்.

இதையடுத்து இவர்களை கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.கத்தார் போலீசார் வழங்கு சம்மந்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதரங்களை வைத்து. இவர்களுக்கு மரணதண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்த்து கத்தார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அப்போதைய மத்திய அரசின் முயற்சிகள் செய்து அங்குள்ள இந்திய தூதரக மூலம் அவர்களுக்கு சட்டம் உதவிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழக்கை நடத்த பல லட்சம் கொடுத்து உதவியும் நினைவு கூறத்தக்கது.
இந்நிலையில் இன்று கத்தார் கீழ்  நீதிமன்றத்தில் வழங்கி தீர்ப்பை எதிர்த்து கத்தார் உச்ச நீதிமன்றம் தொடுக்கப்பட்ட மேல் முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில்  செல்லதுரை பெருமாள், அழகப்ப சுப்பிரமணியன் ஆகியவர்கள்க்கு மரண தண்டனையும் மூன்றாவது குற்றவாளி  சிவகுமாருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனையும் அளித்து தீர்ப்பளித்துள்ளது. 

இதற்காக முக்கிய காரணம் கொலை செய்யபட்ட பெண்மணியின் குடும்பத்தினர் 
இவர்களுக்கு  மரணதண்டனை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

இதையடுத்து கத்தார் இந்திய தூதரக அதிகாரி பி.குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வழக்கறிஞர்களுடன் விவாதித்து. 

இவர்கள் தேவையான சட்ட உதவிகள் வழங்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் வழங்கி தீர்ப்பில் வேறு பெரிய மாற்றங்கள் எது எற்படும் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதை பற்றி எந்த செய்தி இன்றைய தமிழ் செய்தித்தாள் மற்றும் செய்தி சானல்களில் வரவே இல்லை.

வேற்று மொழி சானல்கள் மற்றும் செய்தித்தாள்கள் இது எதோ அவர்கள் மாநிலத்தில் உள்ள யாருக்கோ நடந்த போல் அக்கரைப்பற்று வெளியிட்டுள்ளது...
   தமிழக பத்திரிக்கை சானல்கள்.....?

 Reporting :Kuwait-தமிழ் பசங்க

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-