அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் அடுத்த அரசலூர் மாரியம்மன் கோயில் அருகில் நேற்று (26) ஜல்லிக்கட்டு போட்டி மாவட்டநிர்வாகத்தின் அனுமதியுடன் நடந்தது.
இதையொட்டி வாடிவாசல் மற்றும் 100 மீ நீளத்துக்கு இருபுறமும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டன.
மாடுகள் ஓடும் இடத்தில் வீரர்களுக்கும், மாடுகளுக்கும் காயம் ஏற்படாமல் இருக்க முதலில் மணலை கொட்டி, அதன்மீது தென்னை நார்கள் பரப்பப்பட்டன.
திருச்சி மாவட்டம் சூரியூர், இருங்களூர், கோக்குடி, சமயபுரம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, மங்கிப்பட்டி, பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி, கல்லுப்பட்டி, கடம்பூர், விசுவக்குடி மற்றும் அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன.
கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் செங்கோட்டையன் தலைமையில் 4 மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர்.
அதேபோல் மாடுபிடி வீரர்களையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து மைதானத்துக்குள் அனுப்பினர்.
பின்னர் ஜல்லிக்கட்டு துவங்கியது. முதலில் மணியக்கார்களின் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
அதன்பின் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
காளைகளை அடக்கியவர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மரத்தில் மோதி காளை சாவு:
வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட அன்னமங்கலத்தைச் சேர்ந்த கு. செபஸ்டியானின் காளை, மீண்டும் வாடிவாசலுக்குள் சென்று வெளியேறிய வேகத்தில் அங்குள்ள மரத்தில் மோதி உயிரிழந்தது. இதையடுத்து அக்காளையை சுமை ஆட்டோ மூலம் ஊருக்கு எடுத்துச் சென்றனர். 10 மணிக்கு பிறகு வந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க 50-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


மேலும் வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்த காளைகள் முட்டியதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.


மதியம் 2 மணி வரை நடைபெற்ற போட்டியில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகாரிகளும், ஜல்லிகட்டு ஏற்பாட்டாளர்களும் மேலும் போதிய அளவு முன்னேற்பாடுகள் செய்து காளைகளை அவிழ்த்துவிட்டிருந்தால் விபத்தினை தவிர்த்து இருக்கலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-