அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத்தில் இனிமுதல் Visiting விசாவில் வரும் நபருக்கு மருத்துவ காப்பீடு கட்டாயம் 
எடுக்க வேண்டிய நிலை ஏற்பட உள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

இதன் மூலம் Visiting விசாவில் குவைத்தில் வரும் நபர்கள் அரசு வழங்கிய வரும் இலவச மருத்துவ சேவையினை பெற முடியாது. 

Visiting விசாவிற்க்கு விண்ணப்பிக்கும் Sponsor அதனுடன் மருத்துவ காப்பீடு நகலுடன் இணைத்து வழங்க வேண்டியது இருக்கும்.

தற்போது கலைக்கப்பட்ட பழைய அரசு கொண்டுவந்த  இந்த திட்டத்திற்கு கடந்த வாரம் பதவியேற்ற 15 -வது பாரளுமன்ற புதிய அமைச்சரவை அனுமதி வழங்கியதை அடுத்து எம்.பி கலீல்அல்ஸலே பாரளுமன்றத்தில் இந்த திட்டத்தை பற்றி  திரும்பவும் விவாதித்தார்.

இந்த சட்டம் கொண்டு வருவதற்கும் முக்கிய காரணம் Visiting விசாவில் குவைத்தில் வரும் வெளிநாட்டினர் அரசு வழங்கும் இலவச மருத்துவ காப்பீட்டை தவறான முறையில் பயன்படுத்துவ அரசின் கவனத்திற்கு வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் மருத்துவ காப்பீட்டுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை தவறில்லை என்றும் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பு இதன் மூலம் தவிர்க்க முடியும் என்று  பாராளுமன்ற கூட்டத்திற்கு பிறகு வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில் கலீல்_அல்_ஸலே அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Source:Asianet news

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-